பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கக்கோரி திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சட்டப்பூர்வமான ஓய்வூதியம் ரூ.3,500 வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் அரசு காலிப்பணியிடங்களில் 50 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்ட செயலாளர் அசோக், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
1 More update

Next Story