மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க கூடாது கலெக்டரிடம் மனு
குலசேகரத்தில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க கூடாது கலெக்டரிடம் மனு
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
குலசேகரம், நாகக்கோடு சந்திப்பில் நெடுஞ்சாலையோரம் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டபோது இந்த மதுக்கடையும் மூடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் இந்த மதுக்கடை திறப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரிகிறது. இது கோர்ட்டு உத்தரவுக்கு முரணானது.
மேற்படி, கடை அமைந்திருக்கும் பகுதியை சுற்றிலும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், ஆஸ்பத்திரிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், வங்கி உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினமும் ஏராளமான மக்கள், மாணவ–மாணவிகள் சென்று வரும் இவ்வழியில் மீண்டும் மதுக்கடை திறந்தால் போக்குவரத்து நெருக்கடியும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மூடப்பட்ட மதுகடையை மீண்டும் திறக்க கூடாது. அந்த கடையை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story