தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அம்மா திட்ட முகாம்தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை(வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கிறது.
கிராமங்கள் விவரம்இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா தூத்துக்குடி–1 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வாழவல்லான் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா கானம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகா புதுக்குளத்திலும், கோவில்பட்டி தாலுகா நக்கலமுத்தன்பட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா நமச்சிவாயபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா செமப்புதூரிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சாமிநத்தத்திலும், கயத்தாறு தாலுகா அச்சங்குளம் கிராமத்திலும் நடக்கிறது.
கோரிக்கை மனுஇந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. ஆகையால் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையலாம், என தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.