ஊட்டி அரசு கலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ஊட்டி அரசு கலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
ஊட்டி
ஊட்டி அரசு கலை கல்லூரியில் 50–க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷிபா தலைமை தாங்கினார். மாநில தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக, ஊட்டி அரசு கலை கல்லூரியில் மதியத்திற்கு பிறகு வகுப்புகள் நடக்கவில்லை.
Related Tags :
Next Story