நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

திருப்புவனம்,

மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை மத்திய–மாநில அரசுகள் பெற்றுத்தர கோரி காரைக்குடி செக்காலை ராஜீவ்காந்தி சிலை அருகில் அனைத்துக்கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமை தாங்கினார். சிவகங்கை வக்கீல் இன்பலாதன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காங்கிரஸ் சார்பில் பாண்டி மெய்யப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவாஜிகாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கந்தசாமி, முஸ்லிம் லீக் ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சி கமரல்ஜமான் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட தி.க. செயலாளர் என்னராசு பிராடலா ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மாவட்ட தி.க. தலைவர்கள் காளாப்பூர் ராஜாராம், காரைக்குடி அரங்கசாமி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


Next Story