கதிராமங்கலம் மக்களுக்கு ஆரதவு தெரிவித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.
மதுரை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மதுரை மாவட்ட தலைவர் வேலுதேவா தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செல்வா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story