திருப்போரூர் அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
மாமல்லபுரத்தை சேர்ந்த 15 பேர் திருவண்ணாமலைக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலை திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
திருப்போரூர்,
திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பையனூரை சேர்ந்த வேன் டிரைவர் செந்தில் மற்றும் வேனில் இருந்த 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.
இது குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story