நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 3:45 AM IST (Updated: 13 July 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி கடலூரில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும், தமிழக சட்டசபையில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலை மத்திய, மாநில அரசுகள் பெற்று தரக்கோரியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் சிவக்குமார் வரவேற்றார். தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மனித நேய ஜனநாயக கட்சி மன்சூர், மனித நேய மக்கள் கட்சி சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ்–2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா, தி.க. மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் உள்பட தி.க., தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க. நகர தலைவர் எழிலேந்தி நன்றி கூறினார்.

1 More update

Next Story