தேன்கனிக்கோட்டை அருகே விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


தேன்கனிக்கோட்டை அருகே விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அறம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், கணபதி, வீரமுத்து ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட நடுகற்களும், விஜய நகர பேரரசு கால கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:- ஜெ.காருப்பள்ளி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட நடுகற்கள் உள்ளன. மேலும் விஜய நகர பேரரசு கால கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு குறித்து முழுமையாக அறியமுடியவில்லை. இருப்பினும் அதில் இருக்கும் சின்னங்களை பார்க்கும்போது இது, சிவன் கோவிலுக்கு தானமாக நிலம் கொடுத்தது பற்றியதாக இருக்கலாம். அதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story