கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை
தர்மபுரி நகர கடைகளில் ‘திடீர்’ சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 270 கிலோ அழுகிய பழங்களை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி நகரில் உள்ள பழக்கடைகளில் மெழுகு தடவப்பட்ட பழங்கள், அழுகிய பழங்கள் மற்றும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், குமணன் மற்றும் குழுவினர் தர்மபுரி நகரில் பஸ்நிலையம், டேக்கீஸ்பேட்டை பகுதிகளில் உள்ள பழக்கடைகள், பழ குடோன்களில் நேற்று ‘திடீர்’ சோதனை நடத்தினார்கள். அப்போது 240 கிலோ ஆரஞ்சு பழங்கள், 20 கிலோ ஆப்பிள்கள், 10 கிலோ பப்பாளி என மொத்தம் 270 கிலோ பழங்கள் அழுகிய நிலையில் கடைகள் மற்றும் மண்டிகளில் இருந்தது தெரியவந்தது. அந்த பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி பஸ்நிலைய பகுதியில் சில கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் குழுவினர் மெழுகு தடவப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா கூறுகையில், உடல்நலத்திற்கு கேடான, மெழுகு தடவப்பட்ட ஆப்பிள்கள் மற்றும் பிற பழங்களை கடைகளில் வைத்து விற்கக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் 1,564 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இவற்றில் 620 கடைகள் மட்டுமே உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளன. மீதமுள்ள கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Tags :
Next Story