சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தாழைப்பட்டியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளியணை,

தாந்தோன்றி ஒன்றியம் கே.பிச்சம்பட்டி ஊராட்சி தாழைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொது மக்களின் பயன்பாட்டிற்காக அந்தப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி, அதன் மூலம் குழாய்களின் வழியாக தெரு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக போதுமான அளவு ஆழ்குழாய் கிணற்றில் நீரில்லை. எனவே இருக்கின்ற நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி குறைந்த அளவு நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தனி நபர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீரை அதிக அளவு பயன்படுத்தி கொள்வதால் பொது குடிநீர் குழாயிலும், தெருவின் கடைசிப் பகுதியில் உள்ளவர் களுக்கும் தண்ணீர் கிடைப்ப தில்லை. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனி நபர் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆங்காங்கே பொது குடிநீர் குழாய் மட்டும் அமைக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாழைப்பட்டி கடை வீதியில் வெள்ளியணை-ஈசநத்தம் சாலையில் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் முத்துபிரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத் தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதன்பின் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

1 More update

Related Tags :
Next Story