அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமி பிரியா பொறுப்பேற்பு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்


அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமி பிரியா பொறுப்பேற்பு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்
x
தினத்தந்தி 13 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுள்ள லட்சுமி பிரியாவிற்கு, அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டராக 3½ ஆண்டுகளுக் கும் மேலாக பணியாற்றி வந்த சரவணவேல்ராஜ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக பள்ளி கல்வித்துறை இணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே சரவணவேல்ராஜ் விடுப்பில் இருந்ததால் சுமார் 70 நாட்களாக அவரது பொறுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணை செயலாளராக பணியாற்றி வந்த லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்., அரியலூர் மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட புதிய கலெக்டராக லட்சுமி பிரியா, நேற்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், புதிய கலெக்டரிடம் பொறுப்பினை ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள லட்சுமி பிரியாவுக்கு மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நிருபர்களிடம் கூறுகையில்,

அரியலூர் மாவட்டத்தை தொழில் துறையில் வளர்ச்சியடையவும், ஆரம்ப கல்வி, பொது சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுபடுவேன் என்று கூறினார்.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியாவின் சொந்த ஊர் தூத்துக்குடி. 2006-ல் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று வேலூரில் உதவி கலெக்டராக பயிற்சியிலும், மேட்டூரில் சார் கலெக்டராகவும், கூடுதல் கலெக்டராக கிருஷ்ணகிரியிலும், சேலம், மாநகராட்சியில் ஆணையராகவும், ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆணையராக திருநெல்வேலியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக் கது ஆகும். மாவட்ட கலெக்டரின் கணவர் அருண்ராய் சென்னை மெட்ரோவாட் டர் மேலாண்மை இயக்குனராக பணி புரிகின்றார். 
1 More update

Related Tags :
Next Story