ஜனாதிபதி தேர்தல்: வாக்குச்சாவடியில் அதிகாரிகள் ஆய்வு


ஜனாதிபதி தேர்தல்: வாக்குச்சாவடியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இதற்காக புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

மேலும் வாக்குச்சீட்டுகள் டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் வாக்குச்சாவடி அறையை நேற்று ஆய்வு செய்தனர். மேலும் வாக்குப்பதிவின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.


Next Story