புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 3:30 AM IST (Updated: 13 July 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

ஆர்ப்பாட்டத்துக்கு நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத் முன்னிலை வகித்தார்.

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கீதநாதன், சமூக நீதி பேரவை தனராமன், மனிதநேய மக்கள் கட்சி பஷிர் அகமது, தந்தை பெரியார் திராவிடர் கழக வீர.மோகன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story