சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம்


சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 5:44 AM IST (Updated: 13 July 2017 5:44 AM IST)
t-max-icont-min-icon

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை)

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இணை பேராசிரியர் சாந்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 7–வது ஊதிய விகிதத்தை ஒரே மாதிரி ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்திட 100 சதவீத நிதியுதவியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், தற்காலிக, பகுதிநேர, குறுகிய கால, கவுரவ, சுயநிதி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள், கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story