கோவில்பட்டியில் விவசாயிகள் 9–வது நாளாக போராட்டம்


கோவில்பட்டியில் விவசாயிகள் 9–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 2:15 AM IST (Updated: 13 July 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 9–வது நாளாக விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 9–வது நாளாக விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருக்கும் போராட்டம்

கடந்த 2 ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை வாபஸ் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 5–ந்தேதி காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

நூதன போராட்டங்கள்

விவசாயிகள் தினமும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று 9–வது நாளாக விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்தது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி, தலையில் முக்காடு போட்டும், அரசிடம் பிச்சை கேட்கும் வகையிலும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயலாளர் கீதா, சவுந்திரபாண்டியன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முத்து, நவநீதகிருஷ்ணன், அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story