விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது.
மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே உள்ள வீரகாஞ்சிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று காலையில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. வீரகாஞ்சிபுரத்தில் இருந்து விளாத்திகுளம் வரையிலும் சென்று, திரும்பி வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. சிறிய மாட்டு வண்டி போட்டியை சூரங்குடி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சொரிமுத்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் ஓட்டப்பிடாரம் தாலுகா சிந்தலக்கட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மாட்டு வண்டி முதலிடமும், சிங்கிலிபட்டியைச் சேர்ந்த ஆனந்த் மாட்டு வண்டி 2–வது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த பூங்குளத்தன் மாட்டு வண்டி 3–வது இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழா
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 18 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் விளாத்திகுளத்தை சேர்ந்த சித்திரைபாண்டியன் வண்டி முதலிடமும், பூசனூரை சேர்ந்த பிரித்திஷா வண்டி 2–வது இடமும், விருதுநகர் மாவட்டம் துத்திநத்தத்தை சேர்ந்த ரம்யா வண்டி 3–வது இடமும் பிடித்தன.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.15,555, 2–வது பரிசாக ரூ.14,444, 3–வது பரிசாக ரூ.13,333 வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.9,999, 2–வது பரிசாக ரூ.8,888, 3–வது பரிசாக ரூ.7,777 வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story