கடலூரில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடலூரில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது. இப்பேரணி கடலூர் ஜவான் பவன் அருகில் இருந்து புறப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
‘போதையில் ஆடாதே பாதியில் போகாதே, போதை பழக்கம் உயிரை பறிக்கும், நல்ல உடலை பாழாக்கும் போதை பழக்கத்தை நிறுத்திக்கோ, உன்னையும், குடும்பத்தையும் காத்துக்கோ’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தியபடி கோஷம் போட்டுக்கொண்டு வந்தனர். இப்பேரணி கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் முடிவடைந்தது. பேரணியில் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுந்தரம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், உதவி ஆணையர்(கலால்) ராமு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விசுவநாதன், கோட்ட கலால் அலுவலர் ரம்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story