லாரி டிரைவரை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி பணம், ஏ.டி.எம். கார்டுகள் பறிப்பு
தாராபுரம் அருகே லாரி டிரைவரை கயிற்றால் கட்டிப்போட்டு, கத்தியால் குத்தி பணம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள மரவுபட்டி மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48). சொந்தமாக லாரி வைத்து உள்ளார். இந்த நிலையில் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் இருந்து, சிமெண்டு மூடைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஏழுமலை தாராபுரம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். லாரியில் கிளனர் யாரும் இல்லை.
நேற்று அதிகாலை 2 மணிக்கு தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் தாசர்பட்டி அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது ஏழுமலைக்கு தூக்கம் வந்துவிட்டது. இதனால் லாரியை அவரால் மேற்கொண்டு ஓட்டமுடியவில்லை. இதையடுத்து சாலையோரமாக இருந்த கிருஷ்ணன் கோவிலின் முன்பு லாரியை நிறுத்தி விட்டு, அதில் ஏழுமலை படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது சிலர் அவரை எழுப்புவதை உணர்ந்து ஏழுமலை திடுக்கிட்டு எழுந்தார். அப்போது அவர் முன்பு 4 மர்ம ஆசாமிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் எதற்காக என்னை எழுப்பினீர்கள் என்று ஏழுமலை கேட்டுள்ளார். இதற்கிடையில் 4 ஆசாமிகளில் ஒருவர், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கல்லை எடுத்து ஏழுமலையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் காயம் அடைந்த ஏழுமலை நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். உடனே மற்ற 3ஆசாமிகளும் ஏழுமலையின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டியுள்ளனர்.
அதன் பிறகு மயக்கம் தெளிந்த ஏழுமலை “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..,” என்று சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த ஆசாமிகள் அங்கிருந்த துணியை எடுத்து ஏழுமலையின் வாயில் வைத்து திணித்தனர். பிறகு கத்தியை காட்டி மிரட்டி பணம் வைத்திருக்கும் இடத்தை சைகையால் காட்டுமாறு கூறினர். அதற்கு ஏழுமலை மறுத்ததால், ஏழுமலையின் தொடையில் கத்தியால் குத்தினர்.
இதனால் வலிதாங்க முடியாத ஏழுமலை, பணம் வைத்துள்ள இடத்தை சைகையால் காட்டியுள்ளார். உடனே அந்த ஆசாமிகள் அங்கிருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்துக் கொண்டதோடு, ஏழுமலையிடம் இருந்த செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகளையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். அதன் பிறகு காலையில் தானாகவே எழுந்த ஏழுமலை, கை மற்றும் கால்களில் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டு, தாராபுரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார். லாரி டிரைவரை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கட்டிப்போட்டு பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story