அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 3:45 AM IST (Updated: 14 July 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

பணிநிரந்தரம் செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் உள்ள 83 அரசு கலைக்கல்லூரிகளில் சுமார் 3,440 கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதன்பின் இவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்வதாக அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.ஆனால், இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை அரசு ஏற்றுக்கொண்டதால் அங்கு பணியாற்றி வந்த பணியாளர்கள், விரிவுரையாளர்கள் அரசு கலை கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

மேலும், கவுரவ விரிவுரையாளர்கள் தேசிய தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் இந்த தேர்வினை எழுதி 1000 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மீதம் உள்ளவர்கள் தகுதி தேர்வை எழுத கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலாளர் பசுபதி, பொருளாளர் வாசுகி, மதுரை மண்டல பொறுப்பாளர் அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story