டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து மருத்துவமனைகளையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்
டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து மருத்துவமனைகளையும் தூய்மையாக பரா மரிக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு டெங்கு மற்றும் காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு டெங்கு மற்றும் காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் டெங்கு மற்றும் காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், டெங்கு காய்ச்சலில் ஏற்படும் தீவிர நிலையினை கையாளுவதற்கான மேலாண்மை பயிற்சி குறித்து படக்காட்சி மூலம் தெளிவாக விளக்கப்பட்டது.
காய்ச்சல் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் கவனமாக சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன் டெங்கு மற்றும் தொற்று நோய் குறித்த விவரங்கள் இருப்பின் அந்த தகவலையும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட பாதிப்பு இருக்கும் பகுதிகளில் உடனடியாக மருத்துவ பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுகாதார துறையில் மருத்துவக் குழுக்கள் மற்றும் சுகாதாரக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து மருத்துவ மனைகளிலும் கொசுக்கள் புகாத வண்ணம் கொசு வலை கொண்ட படுக்கைகள் அமைப்பதோடு, மருத்துவ மனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி வகுப்பில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சுரேஷ்குமார், பொது சுகாதார துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story