கும்பகோணம் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணம் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 3:30 AM IST (Updated: 14 July 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணம்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சிறப்பு தேர்வின் மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 11-ந் தேதி, 12-ந் தேதி ஆகிய 2 நாட்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

Related Tags :
Next Story