விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 July 2017 4:00 AM IST (Updated: 14 July 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள மேலநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 35). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் மீனாட்சி சுந்தரம் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது மேலநம்மங்குறிச்சி பாமணி ஆற்றுப்பாலத்தில் மீனாட்சி சுந்தரம் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஹெல்மெட் அணிந்து நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் 2 பேர் மீனாட்சி சுந்தரத்தை வழிமறித்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அருகில் இருந்தவர்கள் மீனாட்சி சுந்தரத்தை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி சுந்தரத்தை வெட்டிய மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story