போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்ற போது வாலிபர் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்ற போது வாலிபர் திடீரென உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லலிதா, போலீஸ் ஏட்டு இனயதுல்லா மற்றும் போலீசார் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் கடம்பனூரில் சாராயம் விற்றதாக தேவேந்திரன் (வயது61), கணேஷ் (36) ஆகியோரை பிடித்தனர்.
இதை தொடர்ந்து கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி புலியூர் பகுதியில் சாராயம் விற்று கொண்டிருந்ததாக தவசு மகன்கள் ஜெயராமன் (41), சுரேஷ் (34), அதேபகுதியை சேர்ந்த துரை (52) ஆகிய 3 பேரை பிடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றியுள்ளனர். சுரேஷ் ஜீப்பில் ஏற மறுத்ததால் போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சுரேசுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சுரேசை நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரேசின் உறவினர்கள் நாகை அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது சுரேஷ் மீது தாக்குதல் நடத்தி, அவரது சாவுக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேசின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மதுவிலக்க அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், உதவி கலெக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், சுரேஷ் இறந்தது குறித்து நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதைதொடர்ந்து குற்றவியல் முதன்மை நீதிபதி கவிதா முன்னிலையில் டாக்டர்கள் விக்னேஷ், நிவேதிதா ஆகியோர் சுரேசின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து சுரேசின் மனைவி அமராவதி கொடுத்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்ற போது திடீரென வாலிபர் இறந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story