வேடசந்தூர், நிலக்கோட்டை பகுதிகளில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வேடசந்தூர், நிலக்கோட்டை பகுதிகளில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை,
வேடசந்தூர் அருகே அம்மாபட்டி புதுப்பட்டியில் சுமார் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு அந்த பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தன. வறட்சி காரணமாக இந்த 3 ஆழ்துளை கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டன.
இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங் களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கொக்குப்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங் களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பிள்ளையார்நத்தம் ஊராட்சி கல்கோட்டையை சேர்ந்த பொதுமக்களும், பழைய நிலக்கோட்டை பொதுமக்களும் அடுத்தடுத்து வந்து ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் கல்கோட்டை கிராம மக்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 கிராம மக்களிடமும், ஒன்றிய அலுவலக முதுநிலை அலுவலர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு 3 கிராம மக்கள் அடுத்தடுத்து ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி பகுதிக்கு, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், அந்த பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு வறண்டுவிட்டது.
இதையொட்டி மாலப்பட்டி, காமாட்சி நகர், அபிராமிநகர், சுப்புராமன் பட்டறை ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் குடிநீர் நிறுவனத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாலப்பட்டி- திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல திண்டுக்கல் ஆர்.வி.நகரை சேர்ந்த பொதுமக்கள் வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தெற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், ஆர்.வி.நகரில் உள்ள அடிகுழாயை எடுத்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த அடிகுழாயை எடுக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அடிகுழாயை எடுத்துவிட்டு குடிநீர் தொட்டி அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story