மயிலாடும்பாறை துணை சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி
மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு,
மயிலாடும்பாறை கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், மூலக்கடை, முத்தாலம்பாறை, பொன்னன்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு சென்று வந்தனர். மேலும் கர்ப்பிணிகளும் கர்ப கால பரிசோதனைகளுக்கு இந்த துணை சுகாதார நிலையத்துக்கே வந்து சென்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு டாக்டர், ஒரு நர்சு நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள டாக்டர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. நர்சு மட்டும் வாரத்துக்கு ஒரு முறை சுகாதார நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக கர்ப்பிணிகளுக் கான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த நர்சும் முறையாக பணிக்கு வருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், துணை சுகாதார நிலையம் பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட கிடைப்பதில்லை. கர்ப்பிணிகளை மயிலாடும்பாறையில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லும் நிலை உள்ளது.
இதனால் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டு மயிலாடும்பாறை துணை சுகாதார நிலையத்துக்கு டாக்டரை நியமிக்கவும், அதுவரை நர்சு முறையாக பணிக்கு வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story