அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் மறியல்
ஆரணியில் இருந்து செய்யாறுக்கு இயக்கப்பட்ட அரசுபஸ் நிறுத்தப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி,
குறிப்பாக, மாலை நேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், மதியம் 12.20 மணியளவில் ஆரணியில் இருந்து செய்யாறுக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்.235 என்ற அரசு பஸ்சை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், ஆரணியில் இருந்து செய்யாறுக்கு இயக்கிய தடம் எண்.235 அரசு பஸ் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஸ் இயக்கப்பட வில்லை. இதனால் ஆரணி பகுதி மாணவர்கள், சரியான நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி, 100–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு ½ மணிநேரத்திற்கும் மேலாக போலீஸ்நிலைய வளாகத்தில மாணவர்களை சிறைவைத்தனர். இதனால் அவர்களால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் ஆரணியில் இருந்து செய்யாறுக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்.235 அரசு பஸ்சில் அதிகம் கல்லூரி மாணவர்களே பயணம் செய்தோம். நாங்கள், இலவச பஸ் பாசில் பயணித்ததால் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்சால் நஷ்டம் ஏற்படுவதாக கருதி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.