நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2017 2:00 AM IST (Updated: 14 July 2017 6:44 PM IST)
t-max-icont-min-icon

மேலக்கல்லூர், மங்கம்மாள் சாலை துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

நெல்லை,

மேலக்கல்லூர், மங்கம்மாள் சாலை துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும்,

தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

இதேபோல் கரிசல்பட்டி, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை ஆகிய துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி,

கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரி ரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம், நவ்வலடி, ஆத்தங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் இன்று மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள் புலமாடன் (கல்லிடைக்குறிச்சி), அருள் (தென்காசி), ராஜன் (வள்ளியூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story