தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கடிதம் எழுதும் போட்டி


தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கடிதம் எழுதும் போட்டி
x
தினத்தந்தி 15 July 2017 2:00 AM IST (Updated: 14 July 2017 7:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஒன்றிய தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், காமராஜர் பிறந்த நாள்

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஒன்றிய தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, எனக்கு பிடித்த காமராஜர் என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது.

தூத்துக்குடி வி.வி.டி. நினைவு தொடக்க பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஜெயவேணி தலைமை தாங்கினார். போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் கலந்து கொண்டு கடிதம் எழுத்தினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் வி.வி.சதீஷ் பரிசுகள் வழங்கினார்.

மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அம்பாசங்கர், ஆதிதமிழர் கட்சி தென்மண்டல தலைவர் மனோகர், மாவட்ட தி.மு.க. மீனவர் அணி துணை அமைப்பாளர் பாலன், தூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி செயலாளர் கிட்டு, தூத்துக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் விஜயன், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஒன்றிய தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் ரவி நன்றி கூறினார்.


Next Story