திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக மன்னார்குடி போலீஸ் நிலையம் தேர்வு
திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக மன்னார்குடி போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய 5 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையங்கள் உள்பட 27 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 புறக்காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து போலீஸ்் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவு, குற்ற தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்றத்தடுப்பு நடவடிக்கை கையாளும் முறை, குற்றம் கண்டுபிடிப்பு, மனு தாரரிடம் அணுகும்முறை, போக்குவரத்து சீரமைப்பு, விபத்து இல்லாத நகரமாக வைத்திருப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு மதிப்பெண் அளித்து, அதன் அடிப்படையில் சிறந்த போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கழனியப்பனுக்கு போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதேபோல் உட்கோட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாரூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரியா, குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, மன்னார்குடி டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, உஷாராணி, கோட்டூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், முத்துப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

Related Tags :
Next Story