தர்மபுரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 3:36 AM IST (Updated: 15 July 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

இதில் சங்க மாநில தலைவர் சண்முகராஜா, மாநில துணைத்தலைவர்கள் சின்னராசு, ராஜேந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். முன்னாள் மாநில துணைத்தலைவர் அன்பழகன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி நிர்வாகிகள் ஜெயக்குமார், சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு மதுக்கடைகளை திறப்பதற்காக மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்தை கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story