சிறை அதிகாரிகளுக்கான அறை சசிகலாவின் பார்வையாளர் அறையாக மாற்றப்பட்டதா?


சிறை அதிகாரிகளுக்கான அறை சசிகலாவின் பார்வையாளர் அறையாக மாற்றப்பட்டதா?
x
தினத்தந்தி 15 July 2017 4:32 AM IST (Updated: 15 July 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க.(அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க.(அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சிறையில் தனி சமையல் அறை உள்பட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாகவும் கூறி சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதற்கிடையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் பணியாற்றிய ஒரு அதிகாரி சமீபத்தில் ஓய்வு பெற்றார். அந்த அதிகாரிக்காக சிறைக்குள் ஒரு பெரிய அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த அதிகாரி ஓய்வு பெற்று விட்டதால், அவரது அறை நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக தெரிகிறது. பின்னர் சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள், ஏதாவது ஒரு நேரத்தில் அந்த அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்துவதற்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க வரும் பார்வையாளர்கள், ஓய்வு பெற்ற அந்த அதிகாரியின் அறையில் அமர்ந்து சசிகலாவுடன் பேசி வந்ததாகவும், சசிகலாவை பார்க்க வருபவர்களுக்காகவும், அவர்களுடன் சசிகலா பேசுவதற்காகவும் அந்த அறை மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அறையில் 8 நாற்காலிகள் உள்ளிட்ட சில வசதிகள் இருப்பதாகவும், அதே நேரத்தில் அந்த அறையிலேயோ, அறையை சுற்றியோ எந்த விதமான கண்காணிப்பு கேமராக்களும் இல்லை என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.


Next Story