படவேட்டில் ஊராட்சி கள பணியாளர்கள் பயிற்சி முகாம்
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகொண்டாபுரம் தொடக்கப்பள்ளியில் ஊராட்சி களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகொண்டாபுரம் தொடக்கப்பள்ளியில் ஊராட்சி களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆர்.அண்ணாச்சி வரவேற்றார்.
முகாமில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ரேஷன்கடை ஊழியர்கள், புது வாழ்வு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி செயலாளர்கள் தினகரன் (காளசமுத்திரம்), கிருஷ்ணராஜ் (அனந்தபுரம்), முருகன் (கல்பட்டு), பாரி (வாழியூர்), பத்மினி (சேதரம்பட்டு), பழனி (கல்குப்பம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story