தானே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும் மின்சார கார்!

தானே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும் மின்சார கார்!
x
தினத்தந்தி 15 July 2017 3:44 PM IST (Updated: 15 July 2017 3:43 PM IST)
t-max-icont-min-icon

நன்றாக வெயிலடிக்கும்போது தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் இந்த கார்களில், வழக்கமான மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

மின்சாரத்தில் இயங்கும் கார்கள், வாகனங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் அவ்வப்போது மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில், சூரிய ஒளி மூலம் தானாகவே ‘சார்ஜ்’ செய்துகொள்ளும் வசதி கொண்ட லைட் இயர் ஒன் என்ற கார்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. லைட் இயர் என்ற நிறுவனம் இக்கார்களைத் தயாரித்திருக்கிறது.

இந்த கார்களின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இது தொடர்ச்சியாக 805 கி.மீ. தூரம் பயணிக்கும் திறன் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றாக வெயிலடிக்கும்போது தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் இந்த கார்களில், வழக்கமான மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படும் இந்த காரின் விலை 87 லட்ச ரூபாயாம்.

விலை அதிகம் என்றாலும், அதற்குத் தகுதியான கார் போலத்தான் தோன்றுகிறது! 

Next Story