நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி 125-வது ஆண்டு விழா: 15 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 125-வது ஆண்டு நிறைவையொட்டி நேற்று 15 கி.மீ. தூர ஓட்டப்பந்தயம் நடந்தது. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பங்கேற்று ஓடினார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 125-வது ஆண்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கல்லூரியின் 125-வது ஆண்டை குறிக்கும் வகையில் ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. ஆண்களுக்கு 15 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும் நிர்ணயித்து ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ஆண்களுக்கான ஓட்டம் இந்த கல்லூரி தொடங்குவதற்கு காரணமாக அமைந்த இடமான மயிலாடியில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கி யது. பெண்களுக்கான ஓட்டம் சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
ஆண்களுக்கான ஓட்டத்தை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும், பெண்களுக்கான ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனும் தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டம் மயிலாடி, சுசீந்திரம், கோட்டார், மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கலெக்டர் அலுவலகம் வழியாக ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியை வந்தடைந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோரும் பங்கேற்று ஓடினார்கள்.
ஆண்களுக்கான ஓட்டத்தில் கேரளாவை சேர்ந்த சிஜூ முதல் இடத்தை பிடித்தார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மனோ 2-வது இடத்தையும், கோவையை சேர்ந்த வடிவேல் 3-வது இடத்தையும், நாகர்கோவிலை சேர்ந்த ஜோஸ் 4-வது இடத்தையும், ஊட்டியை சேர்ந்த நிகில்குமார் 5-வது இடத்தையும் பிடித்தனர்.
இதுபோல பெண்களுக்கான ஓட்டத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த ஐஸ்வர்யா முதல் இடம் பெற்றார். புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தி 2-வது இடத்தையும், சங்கீதா 3-வது இடத்தையும், அனுஷா 4-வது இடத்தையும், நெல்லையை சேர்ந்த முத்துமாரி 5-வது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எட்வின்தாஸ் தலைமை தாங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராபர்ட் புரூஸ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல் 5 இடங்களை பிடித்த ஆண்களுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் முறையே ரொக்க பரிசுகளும், பெண்களில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் முறையே ரொக்க பரிசுகளும், 2 பிரிவிலும் 6 முதல் 25 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story