பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப்பட்டது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கையில் உள்ள சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி விழாவாக பள்ளி செயலாளர் சேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி, சிவகங்கை சிட்கோ கிளையின் மேலாளர் சசிகலா, வக்கீல் ஸ்ரீதரன், உடற்பயிற்சி பயிற்றுனர் பரமசிவம், தலைமை ஆசிரியர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக கட்டப்பட்ட சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியின் நுழைவு வாயிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனும், சாம்பவிகா நர்சரி பள்ளியின் வளாகத்தில் உள்ள காணொலி கல்விக்கான வகுப்பறையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதியும் திறந்துவைத்தனர்.
சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைவர் சித்ரா ராஜரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் ஜான்தாமஸ், தலைமை ஆசிரியை லில்லி ஞானகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் சிவகங்கையில் உள்ள கே.ஆர். மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பொக்கிஷம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நடேசன் செட்டியார் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பால்ராஜ் பரிசுகள் வழங்கினார்.
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கபிலன் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சந்திரன் முன்னிலையில் கல்வி வளர்ச்சி விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அப்சா கல்லூரி தமிழ் துறைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டு காமராஜர் குறித்து கருத்துரை வழங்கினார். ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர்ராவ் தலைமையிலும், கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் தமிழ்மன்ற தந்தை சிவராமன் தலைமையிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் சாம்பந்தப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு கிராம கல்வி குழுத்தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி இலக்கியசெல்வி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாண்டி, தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி கலந்துகொண்டு காமராஜருடன் பழகிய நினைவுகளை மாணவர்களுடன் கலந்துரையாடினார். திருப்பத்தூரில் காந்தி சிலை அருகே கூடிய காங்கிரஸ் கட்சியினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செய்தனர். இதில் நகர் தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் என்னாரசு பிராட்லா உள்ளிட்டோரும், காமராஜர் கக்கன் பேரவை தலைவர் மாயன் ரமேசு, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிங்கம்புணரியில் முன்னாள் எம்.எல்.ஏ. இராம.அருணகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல் பிரான்மலையில் உள்ள வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழாசிரியர் வீரமுத்து வரவேற்றார். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேவகோட்டையை அடுத்த கோடிக்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் டி.எம்.ஐ. கல்வி குழுமங்களின் நிறுவனர் அருள்ராஜ், பள்ளி முதல்வர் ரோஜா மேரி தலைமையிலும், தேவகோட்டை லோட்டஸ் வெங்கடாசலம் செட்டியார் பள்ளியில் முதல்வர் ராஜீ தலைமையிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டது.

Related Tags :
Next Story