தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 July 2017 4:10 AM IST (Updated: 16 July 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் தகி, பொதுச் செயலாளர் சரவணன், சேவா தள மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் மாநில செயலாளர் அ.க. கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள் கோவிந்தசாமி, பி.சி.சேகர், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், விவசாய பிரிவு தலைவர் ராமநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராகுல் பேரவை மாவட்ட தலைவர் விஜயராஜ் நன்றி கூறினார்.

காவேரிப்பட்டணத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர்கள் சிவலிங்கம், கிருஷ்ணன், நகர தலைவர் சிவக்குமார், மாவட்ட பொது செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட தலைவர் சுப்பிரமணி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் கணேசன் மற்றும் லதா ஆகியோர் கல்வி உபகரணங்களை வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியம், ரவி, சியாமளா, ஸ்டெல்லா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மாதையன் தலைமை தாங்கினார். இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி பரிசு வழங்கினார். முடிவில் ஆசிரியர் அச்சுதன் நன்றி கூறினார்.
பர்கூர் பஸ்நிலையத்தில் சுமைதூக்குவோர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சுமைதூக்குவோர் சங்க தலைவர் முரளி மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை தாங்கி, காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் குஜ்ஜப்பன், உறுப்பினர் வெங்கடேஷ், ஆசிரியர்கள் சக்திவேல், காதர் செரிப், பெரியண்ணன், சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. தர்மபுரியில் காங்கிரஸ், த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் குமரேசன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் மோகன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்ட த.மா.கா. சார்பில் தர்மபுரியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட பொருளாளர் புகழ், நிர்வாகிகள் ரமேஷ், வேடியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரிமங்கலத்தில் த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ராமசாமி கோவில் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங் கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது.

Next Story