வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 லட்சம் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
வாணியம்பாடி,
அங்கு சிகிச்சை முடிந்தபின் அதிகாலை 5 மணியளவில் அவர்கள் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததோடு அதிலிருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து பொன்னுசாமி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர்களும் வந்து பீரோவில் பதிவான திருடர்களின் கைரேகையை பதிவு செய்தனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.பொன்னுசாமி வீட்டை பூட்டிவிட்டு செல்வதை அறிந்து நோட்டமிட்டவர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிக்கொண்டு தப்பிய திருடர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story