தாம்பரம் அருகே தி.மு.க. பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு 2 பேர் கைது
தாம்பரம் அருகே உள்ள புதுப்பெருங்களத்தூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஐசக்ராஜ் (வயது 43). தி.மு.க. துணை செயலாளராக உள்ள அவர், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் ஐசக்ராஜ் அலுவலகத்தில் இருந்தார்.
தாம்பரம்,
அப்போது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை அலுவலகத்தின் மீது வீசி விட்டு தப்பி ஓடினர். அந்த குண்டு வெடித்ததில் அலுவலகத்தின் முகப்பு கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐசக்ராஜ் பீர்க்கன்காரணை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீசியதாக புதுப்பெருங்களத்தூரை சேர்ந்த ஜெபசேகர் (35), பாண்டியன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story