2011–ம் ஆண்டு முதல் 2½ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை


2011–ம் ஆண்டு முதல் 2½ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை
x
தினத்தந்தி 16 July 2017 5:36 AM IST (Updated: 16 July 2017 5:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து தலைமை தாங்கி மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் ஆணைபடி அனைத்து பள்ளிகளிலும் முதல் வகுப்பில் இருந்து 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ– மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சலுகைகளை வழங்கி வருகிறது

2017–18–ம் கல்வியாண்டுக்கு 52 ஆயிரத்து 175 மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவ–மாணவிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இது போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் சலுகைகளை வழங்கி வருகிறது. மாணவ–மாணவிகள் இந்த சலுகையை பெற்று சிறப்பாக கல்வி பயில வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story