எடைக்கு கிடைத்த விடை


எடைக்கு கிடைத்த விடை
x
தினத்தந்தி 16 July 2017 11:54 AM IST (Updated: 16 July 2017 11:54 AM IST)
t-max-icont-min-icon

குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் உடல் எடையை குறைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. அதிகமான உடல் எடை அவர்களுக்கு பலவிதங்களில் அசவுகரியங்களை ஏற்படுத்துகிறது.

குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் உடல் எடையை குறைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. அதிகமான உடல் எடை அவர்களுக்கு பலவிதங்களில் அசவுகரியங்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் பலரின் ஏளன பார்வைக்கும், விமர் சனங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அத்தகைய இன்னல்களை எதிர்கொண்டவர் விட்னி தோர். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஹார்மோன் பிரச்சினையால் அபரிமிதமான உடல் பருமன் கொண்ட பெண்மணியாக வலம் வருகிறார். பள்ளி படிப்பின்போதே உடல் எடை பிரச்சினை பின்தொடர்ந்து வந்திருக்கிறது.

ஹார்மோன் பாதிப்பால் இன்சுலின் சுரப்பு அதிகமாகி உடல் எடை கூடிக்கொண்டே போய்விட்டது. அதனை கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை பார்ப்பவர் களெல்லாம் உடல் எடை பற்றியே விசாரித்து மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். ஒருசிலர் ஏளனமாக பேசியிருக்கிறார்கள். அதனால் மன அழுத்தத்திற்குள்ளாகி வீட்டிலேயே முடங்கி கிடந்திருக் கிறார். அதனால் மேலும் எடை அதிகரித்திருக்கிறது.

மற்றவர்களுக்காக தன்னை ஏன் வருத்திக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆதங்கப்பட்டவர் உடல் பருமன் பற்றிய விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். அவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஈடுபாடு இருந்திருக்கிறது. அதன் மீது கவனத்தை திருப்பி இருக்கிறார். அது அவருடைய மன அழுத்தத்திற்கு வடிகால் தேடி கொடுத்ததோடு நடனத்தின் மீதான மோகத்தை அதிகப்படுத்திவிட்டது. தனக்கு பிடித்தமான ஸ்டைல்களில் நடனம் ஆடி மகிழ்ந்திருக் கிறார். அதனையே வீடியோவாக படம் பிடித்து 2014-ம் ஆண்டு யூடியூப்பில் பதிவிட்டு இருக்கிறார். குண்டான உடல் பருமன் கொண்ட விட்னியின் வித்தியாசமான நடன அசைவுகள் பலரது கவனத்தை ஈர்த்திருக் கிறது.

அவருடைய நளின நேர்த்தியும், அதற்கேற்ற பாவனைகளும் பலதரப்பினரின் பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது. எதிரும் புதிருமான விமர்சனங்கள் அந்த வீடியோ வைரலாக பரவுவதற்கும் வழிவகுத்து விட்டது. அவரைப்போன்று குண்டான உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அந்த வீடியோ உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுப்பதாக அமைந்துவிட்டது. தனது நடன வீடியோவை ரசித்து பார்ப்பவர் களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் விதவிதமான ஸ்டைலில் நடனமாடி வீடியோக்களை வெளியிட தொடங்கி விட்டார். இதற்காக தனியாக இணையதளம் தொடங்கியும் தனது நடன வீடியோக்களை பிரபலப்படுத்தி வருகிறார். அதன் மூலம் தன்னை போல் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களை ஒருங்கிணைத்து அவர் களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். பருமனான உடல்வாகு கொண்டவர்களை கேவலமாக விமர்சித்து அவமானப்படுத்தாதீர்கள் என்றும் தனது இணையதள பதிவுகள் மூலம் வேண்டுகோளும் வைத்துள்ளார். டி.வி. ஷோவும் நடத்துகிறார்.

Next Story