கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:30 AM IST (Updated: 16 July 2017 10:48 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி,

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய விதிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் ரமேஷ், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், ரமேஷ்வர்மா, நாகராஜன், ஜெயசூர்யா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து சமய கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் சிறப்பு கட்டணம், தரிசன கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். கோவில் நிலத்தில் இருந்து கொண்டு குத்தகை தர மறுப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.


Next Story