கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:00 AM IST (Updated: 17 July 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்

ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்க தரிசன கட்டணம் மற்றும் ரூ.50 தரிசன கட்டணத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், தனியார் செக்யூரிட்டி பணியாளர்களால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையே இருந்து வருவதால் கோவிலில் உள்ள தனியார் பாதுகாவலர்களை முழுமையாக நீக்கி கோவிலில் பற்றாக்குறையாக உள்ள பாரா உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்பி கோவில் பாது காவலர் களையே பணியில் அமர்த்த வேண்டும். பிரசாத ஸ்டால், தீர்த்த பாட்டில்கள் விற்பனையாகும் கடைகளில் கணினி ரசீது வழங்க வேண்டும்.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சரவணன், நகர் தலைவர் மாரியப்பன், நகர் செயலாளர் கண்ணன், ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகி ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story