நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்; 2 பெண்கள் பலி


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 17 July 2017 3:45 AM IST (Updated: 17 July 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மோதி கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை ராயபுரம் மசூதி தெருவை சேர்ந்தவர் ஆமினா (வயது 53). இவரது மகள் தீனத் (37). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி (58) மற்றும் யசோதம்மாள் (50) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள தர்காவுக்கு வாடகை காரில் சென்றனர்.

கார் நேற்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த பனங்காடு பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் காரின் முன் பகுதி நசுங்கியது. அதில் இருந்த குணசுந்தரி, தீனத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.ஆமினா, யசோதம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆமினா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். யாசோதம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து தடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story