ராணுவத்தில் கால்நடை அதிகாரி வேலை


ராணுவத்தில் கால்நடை அதிகாரி வேலை
x
தினத்தந்தி 17 July 2017 1:11 PM IST (Updated: 17 July 2017 1:11 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் அதிகாரி பணிக்கு கால்நடை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமாக ‘ரிமவுண்ட் வெட்னரி கார்ப்ஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. ராணுவப் பணிக்கு பயன்படுத்தப் படும் நாய்கள், குதிரை மற்றும் கால்நடைகளை மருத்துவ ரீதியாக பரிசோதிப்பது, தயார் செய்வது உள்ளிட்ட மருத்துவ பணிகளில் இந்த படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது இந்த படைப்பிரிவில் கால்நடை அறிவியல் படித்த பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-9-2017 தேதியில் 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பி.வி.எஸ்சி. மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஸ்டேஜ் -1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் நேர்காணல் நடைபெறும். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகள் இதில் நடத்தப்படும். பின்னர் கல்வித் தகுதி மற்றும் அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அதில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சியளிக்கப்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப் படம் ஒட்டி விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம், Dir-ectorate General Rem-ount Veterinary Servi-ces (RV1).QMG’s Branch. Integrated Headquarters of MoD (Army) West Block 3, Ground Floor, Wing No 4, Rk puram, New Delhi 110066 என்ற முகவரிக்கு சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 1-9-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் ஜூலை 15-21 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கலாம்.

Next Story