புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பா.ஜனதாவினர் முற்றுகை


புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பா.ஜனதாவினர் முற்றுகை
x
தினத்தந்தி 18 July 2017 3:15 AM IST (Updated: 17 July 2017 10:23 PM IST)
t-max-icont-min-icon

போடியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பா.ஜனதாவினர் முற்றுகை

போடி,

போடியில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் பி.நாகலாபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு தோட்டத்தில் நேற்று மாலை புதிதாக ஒரு அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போடியை சேர்ந்த பா.ஜனதாவினர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மதுபான கடையால் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், மாணவ–மாணவிகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே இங்கு கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து பா.ஜனதாவினர் கூறுகையில், இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். அதனையும் மீறி தற்போது மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.


Next Story