காஞ்சீபுரத்தில் ரூ.42 லட்சத்தில் கோவில் குளங்கள் சீரமைக்கும் பணி


காஞ்சீபுரத்தில் ரூ.42 லட்சத்தில் கோவில் குளங்கள் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 18 July 2017 4:30 AM IST (Updated: 18 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் மங்கள தீர்த்த குளம் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள மங்கள தீர்த்த குளத்தில் காஞ்சீ மகா பெரியவர் முக்தியடைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் புனித நீராடினார். தற்போது இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.இதையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி உத்தரவின் பேரில் இந்த குளத்தை சீரமைக்க சுற்றுலா நிதியின்கீழ் ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் காஞ்சீபுரத்தின் மைய பகுதியான ரங்கசாமி குளத்தை சீரமைத்து அழகுபடுத்த சுற்றுலா நிதியின் கீழ் ரூ.25 லட்சமும், காஞ்சீபுரம் அஷ்டபுஜம் பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க கோவில் நிதியில் இருந்து ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இந்த கோவில் குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சீரமைத்து ஆழப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குளம் சீரமைக்கப்படும் பணிகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, உதவி கோட்ட பொறியாளர் மஞ்சுளா, கோவில் நிர்வாக அதிகாரிகள், முருகேசன், குமரன், வெள்ளைச்சாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவில் குளங்கள் சீரமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story