தொடர் மணல் திருட்டு: கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி கலெக்டர் எச்சரிக்கை


தொடர் மணல் திருட்டு: கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 July 2017 3:00 AM IST (Updated: 18 July 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே தொடர் மணல் திருட்டு உதவி கலெக்டர் நேரில் ஆய்வு கிராம நிர்வாக அலுவலருக்கு எச்சரிக்கை

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னார் அணையில் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இந்த அணையில் இருந்து சிலர் அனுமதியின்றி டிராக்டர்கள், லாரிகள் மூலம் மணலை திருடிச்செல்வதாக ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலாவுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர், சின்னார் அணைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

 அப்போது மணல் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த மணல் திருட்டை தடுக்க தவறியதாக சூளகிரி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜை, உதவி கலெக்டர் சந்திரகலா எச்சரித்தார். மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உதவி கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.


Next Story