15 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 5 பேர் பலி
மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு 15 நாட்களில் மட்டும் சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். எலிக்காய்ச்சலால் 2 பேர் இறந்தனர்.
மும்பை,
மும்பையில் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 28 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எலிக்காய்ச்சலால் 23 பேரும், மலேரியாவால் 309 பேரும், குடல்அழற்சி நோயால் 544 பேரும், கல்லீரல் அழற்சியால் 88 பேரும், பன்றிக்காய்ச்சலால் 250 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மான்கூர்டை சேர்ந்த ஒருவர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
7 பேர் சாவு
மேற்படி 15 நாளில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாந்திரா மேற்கு பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், போரிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்த 45 வயது பெண், பரேலை சேர்ந்த 65 வயது பெண், மான்கூர்டை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆகிய 5 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எலிக்காய்ச்சலுக்கு காஞ்சூர்மார்க்கை சேர்ந்த 32 வயது காய்கறி வியாபாரியும், மாட்டுங்காவை சேர்ந்த 20 வயது எலக்ட்ரீசியனும் பலியாகி உள்ளனர். இந்த தகவல் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story