தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 19 July 2017 2:15 AM IST (Updated: 19 July 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஏ.டி.எம். கார்டு மோசடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். கார்டு மோசடி குற்றங்கள் தொடர்பாக பல புகார்கள் வருகின்றன. பொதுமக்களின் செல்போனிற்கு வங்கி ஊழியர் போல் தொடர்பு கொள்ளும் மர்ம ஆசாமிகள், ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை பெற்று, அவர்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை திருடி விடுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட, அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணிற்கு, ஏ.டி.எம். கார்டு மோசடி குறித்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றும், காவல் துறையினருடன் சேர்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு கூட்டங்கள்

காவல்துறை சார்பில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மூலம் வங்கி நிர்வாகிகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது போன்ற மோசடி செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story